கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது எனவு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் திகதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.நா. கிளை அமைப்புகளான ஐ.நா., பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
இதேவேளை உலகளவில், 2023 ஆம் ஆண்டில் 51,100 பெண்கள், சிறுமிகளின் உயிரிழப்புக்கு இணையர் அல்லது உறவினர் காரணமாக இருந்துள்ளனர் என்றும் 2022 ஆம் ஆண்டில் 48,800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
மேலும் ஆப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் 21,700 பேர் தங்களது இணையர் மற்றும் உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர் ஆப்பிரிக்கா மக்கள்தொகையின் அளவோடு ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கடந்த ஆண்டு அமெரிக்காவில் 100,000 பெண்களும், ஓசியானியாவில் 100,000 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது