மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் கடைசியாக
ஒக்டோபர் மாதம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக விலை திருத்தப்பட்டிருந்தது
இதேவேளை, லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை மாற்றியமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று லாஃப்ஸ் நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் சுமார் 100,000 விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.