Bill & Melinda Gates அறக்கட்டளையின் பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்துள்ளனர்
Bill & Melinda Gates மன்றத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவின் கொள்கை மற்றும் அரச தொடர்புகள், பிரதான பணிப்பாளர் ஹரி மேனன் அவர்கள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடைகிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது
இதில் சுகாதாரம் மற்றும் போஷாக்கு, விவசாயம், நகர்ப்புற சுகாதாரம், மற்றும் மகளிர் பொருளாதாரத்தை வலுவூட்டல் தொடர்பான மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி மேனன் அவர்கள் இங்கு தெளிவுபடுத்தினார்.
அத்துடன் இலங்கையில் விசேடமாக “டிஜிட்டல் விவசாயம் ” மற்றும் “டிஜிட்டல் பொது அடிப்படை வசதிகள்” ஆகியவற்றின் மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
அமலும் டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதிவசதிகள் மற்றும் பொது அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதற்கான தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் போஷாக்குக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான விடயங்கள் குறித்தான அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி பிரதமர் இங்கு விளக்கமளித்தார்.
இதில் Bill & Melinda Gates மன்றத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி ) மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவிற்கான துணைப் பணிப்பாளர் தனுஜ மீகஹவத்த ஆகியோர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்