வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கிலிருந்து கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர்களாக காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது திசையில் மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது (20-35) கி.மீ. ஆக வீசக் கூடும்.
கடல் நிலை:
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.