தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (12) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்தினை அடுத்து தனியார் வைத்தியசாலையில் இருந்து குறைந்தது 29 நோயாளிகள் திண்டுக்கல் அரசு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக இந்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேற்றிரவு 9.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து, திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
15-க்கும் மேற்பட்ட அம்பியூலன்ஸ் வாகனங்கள் அங்கு உதவிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் கூறும் நிலையில் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.