தேசிய தலைநகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை (13) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைலாஷின் கிழக்கில் உள்ள டெல்லி பப்ளிக் பாடசாலை, மயூர் விஹாரில் உள்ள சல்வான் பப்ளிக் பாடசாலை மற்றும் கேம்பிரிட்ஜ் பாடசாலை ஆகியவற்றுக்கே வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
அதிகாலை 4.30 மணிக்கு முதல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி பொலிஸார் மற்றும் டெல்லி தீயணைப்புப் படையினர் குழு விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வார தொடக்கத்தில், ஆர்.கே.புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பாடசாலை மற்றும் பஸ்சிம் விஹாரில் உள்ள ஜி.டி.கோயங்கா பப்ளிக் பாடசாலை உட்பட டெல்லியில் உள்ள 40க்கும் மேற்பட்ட பாடசாலைகளகுகு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
எனினும், இவைகள் அனைத்து போலி மிரட்டல் செய்திகள் என உறுதிபடுத்தப்பட்டது.