மட்டக்களப்பு போலீஸ் பிரிவுக்குட்பட்ட திறாய் மடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய மீனவர் நேற்று மாலை மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்து காணாமல் போயிருந்த நிலையில் இன்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப் படுவதால் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தும் அதை பொருட்படுத்தாமல் சென்ற மைனஸ் இந்த அனர்த்தம் ஏற்பட்டு மீனவர் இறந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது
மேலும் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு போலீசார் மேலதிக விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது