பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பிபி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அரசு கருவூலத்தில் இருந்த விலை உயர்ந்த ஆபரணத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிய குற்றச் சாட்டிலேயே இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷாரா பீபி மீது இப் புதிய முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிற்காக சிறையில் இருந்த இருந்த இம்ரான் கானும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள புஷாரா பிபியும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர் .
இதன்போது இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இவ் வழக்கு தொடர்பாக டிசெம்பர் 18ஆம் திகதி சாட்சியங்களை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.