நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் நாளை (14) இரவு 7 மணி முதல் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.
வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெந்தலை ரஜமஹா விஹாரையின் பெரஹர உற்சவம் நாளை இரவு 7 மணி முதல் மறுநாள் (15) காலை வரை நடைபெறவுள்ளது.
இதனால், குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.