இலங்கை இராஜதந்திர அதிகாரியான திருமதி ஹிமாலி அருணதிலக்கவிற்கு அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி ஹிமாலி அருணாதிலகா தனது வீட்டுப் பணிப்பெண் பிரியங்கா தனரத்னவை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஃபெடரல் நீதிமன்றத்தால் அவருக்கு 117,028.80 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த குறித்த ஊழியர் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கன்பரா வீட்டில் பணியாற்றியதாக வெளிநாட்டு அவுஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருமதி ஹிமாலி அருணாதிலகா தனது பணியாளருக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கவில்லை எனவும், அதற்கான அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிரியங்க தனரத்னவுக்கு 374,151.90 டொலர் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.
ஹிமாலி அருணாதிலக தற்போது ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக உள்ளார்.