பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
அதன்படி இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை எல்ல, ஹலிலெல மற்றும் பசறை, கண்டி மாவட்டத்தின் மெததும்பர மற்றும் பாததும்பர, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை, அம்பங்கங்க கோராலய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.