சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான சாங் டோங்மேய் மற்றும் அவரது குழுவினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பின் போது சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டினர்.
மேலும் இச்சந்திப்பின் போது இலங்கையில் பெண்களின் வகிபாகத்தை வலுவூட்டுதல்,மற்றும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்போது பெண்களின் தொழிற்படை ஈடுபாடு மற்றும் கீழ்மட்ட பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது உட்பட சீனாவின் முன்னேற்றங்கள் குறித்து சாங் டோங்மேய் விளக்கினார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உட்பட இலங்கை சீனத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர் திரு.பிரதீப் சபுதந்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.