அமெரிக்காவின், விஸ்கான்சின் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் அமைந்துள்ள அபண்டண்ட் லைஃப் கிறிஸ்தவப் பாடசாலையிலேயே இத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 வயதுடைய மாணவியொருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கொல்லப்பட்டதோடு, துப்பாக்கிச் சூட்டை நடத்திய சிறுமியும் உயிரிழந்துள்ளதாக மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து பாடசாலை மற்றும் குறித்த பகுதியில் பெரும் பதற்றமானதொரு சூழல் நிலவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு வருகைத் தந்த பொலிஸார், நிலைமைகளை கட்டுப்படுத்தி, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பாடசாலையில் சுமார் 390 மாணவர்கள் பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.