கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மைய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையில் உள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உமாசுகி நடராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டின் நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தின் மோசமான நிலை இன்று (30) முதல் படிப்படியாக குறையும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளின் வளிமண்டலத்தில் வளிமண்டலத்தில் பனிமூட்டம் போன்ற அசாதாரண சூழ்நிலை நிலவுவதற்கு காற்றின் தரம் குறைவே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளில் இந்த நாட்களில் காற்றின் தரம் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நேற்று (29) இலங்கையில் காற்றின்…
கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு 150க்கு மேல் சென்றதாகவும் இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் வார இறுதியில் குறைந்த காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக NBRO அறிக்கை…