பாகிஸ்தானின் தரபான் பகுதியில் உள்ள போலியோ தடுப்பு முகாம் அருகே நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தடுப்பு முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 பாதுகாப்புப் படை வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.