அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது ஓய்வூதியச் சட்டத்தின்படி திருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெற இருந்தவர்கள், 63 வயது வரை சேவையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விசேட வைத்திய நிபுணர்கள், அனைத்து தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் சுகாதார நிபுணர்கள், பல் சுகாதார நிபுணர்கள், நிர்வாக தர மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு பதிவு செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீட்டிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 65 வயதிலிருந்த கட்டாய ஓய்வை 2022 ஆம் ஆண்டு 60 வயதாக கடந்த அரசாங்கம் குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.