அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தகவலுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 289.73 ரூபாவாகவும், 298.52 ரூபாவாகவும் காணப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (20) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 288.57 ரூபாவாகவும், 297.33 ரூபாவாகவும் காணப்பட்டது.
வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.