உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும் யேசு பாலகனின் பிறப்பைக் கொண்டாடும் நத்தார் தினம் இன்றாகும்.
யேசு பாலகனின் பிறப்பை நினைவுகூரும் நத்தார் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
உலக வாழ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களுடன் இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களும் இணைந்து இன்று இயேசுவின் பிறப்பு விழாவான நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை என்பது கிறிஸ்தவ மக்களால் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும். இன்று இப் பண்டிகை உலக மக்கள் அனைவருடைய வாழ்வியலோடும் கலந்துவிட்ட ஒரு பண்டிகையாகப் பரிணாமம் பெற்றுள்ளது
இற்றைக்கு 2030 ஆண்டுகளுக்கு முன்பாக உலக வரலாற்றிலே, பலஸ்தீன தேசத்திலே நடைபெற்ற பாலன் இயேசுவின் பிறப்பே இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் மிகச் சிறப்பான பண்டிகையாக மாற்றம் பெற்றுள்ளது.
2017 வருடங்களுக்கு முன்னர் பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இவ்வுலகிற்கு அவதரித்த யேசுபாலகன் மனித வர்க்கத்தின் பாவங்களை நீக்குவதற்காக பிறந்ததை இன்றைய தினம் மக்கள் நினைவு கூருகின்றனர்.
கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். . இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம் , இன்றாகும் உலகில் வாழும் மக்கள் தங்கள் சமயத்தையும், சமூக சிந்தனைகளையும் கடந்து கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை இதுவா கும்.
ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை தன்னுடைய போதனை மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து அதை தன் வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். மண்ணில் சமாதானமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ பாடுபட்டவர். மனிதர்களின் பாவங்களுக்காக தன்னையே அற்பனித்தார் இயேசு.
இயேசு கிறிஸ்து அவதரித்ததும் உலகிற்கு அதை உணர்த்த ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது-
மனிதகுலத்தை பாவத் தளையிலிருந்து மீட்க மனித ரூபத்தில் பூவுலகில் அவதரித்த இறைமகன் இயேசு உலக அமைதியின் அடையாளமாக திகழ்கின்றார்.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அயலவர்களிடத்தில் அன்பையும் நல்வாழ்த்துக்களையும் பரிசுப் பொருட்களையும் பகிர்ந்துகொள்ளும் நன்னாளாக கிறிஸ்து பிறப்பு நத்தார் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
அன்று இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் நம்பிக்கையையும் புத்துணர்வையும் கொடுத்த மீட்பர் இயேசுவின் பிறப்பு, இன்று பல்வேறுபட்ட இன்னல்கள், கொடிய நோய்களின் பிடியில் உழன்று கொண்டிருக்கும் உலக மாந்தர்க்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வேண்டும் என நம்பிக்கை கொள்வோம்.
அனைவருக்கும் ஆதவன் செய்தி பிரிவின் நத்தார் தின வாழ்த்துக்கள்!