திருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் என்று இலங்கை விமானப்படையின் (SLAF) ஊடகப் பேச்சாளர் கேப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் அல்ல என்றும், அது இலங்கையின் முப்படைக்கு சொந்தமானது அல்ல என்றும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இது சர்வதேச ரீதியில் தயாரிக்கப்பட்ட இலக்கு ஆளில்லா விமானம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது பயிற்சியின் போது இடம்பெயர்ந்து இலங்கை கடற்பரப்பில் தரையிறக்கப்பட்டிருக்கலாம்.
அது வெடிபொருட்கள் எதையும் கொண்டு செல்லவில்லை என்றும், ஆளில்லா விமானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் அல்லது அச்சுறுத்தலும் இல்லை என்றும் விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
எவ்வாறெனினும், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.