சீன வைரஸ் குறித்து அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
இன்று நாடாளுமன்றத்தில் வைத்தியர் நிஷாந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருவதாகக் கூறினார்.
அத்துடன் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் குறித்து தகவல் கிடைத்தால், அது குறித்து நிச்சயமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இலங்கையிலும் HMPV வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இந்த ஆண்டு HMPV வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இன்னும் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.