தேசிய மக்கள் சக்தியின் பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது
அதன்படி பலாலி வீதி, கந்தர்மடத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் இந்த பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.