“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது.
சுதந்திர தின நிகழ்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளாளர்,
சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவது இன்றைய நமது பொறுப்பாகும்.
அதற்காக தற்போதைய சூழ்நிலையை சரியாக புரிந்துகொண்டு, இன வாத மதவாத குறுகிய சிந்தனைகளை முறியடித்து, ஒன்று சேருவதற்கு இந்த சுதந்திர நாளில் உறுதியுடன் செயற்படுவோம் – என்று குறிப்பிட்டுள்ளார்.