நாட்டில் அண்மைய நாட்களாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அதன்படி நாட்டில் இன்று பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் சிறிது ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்றின் தரக்குறியீடு 68 மற்றும் 114 க்கு இடையில் பதிவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது