ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த 4 மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.