தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.
கொழும்புக்கு பயணித்த வேளையில், சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.