ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஆண்டு நிகழ்வில் கலந்து கொள்ள தலைநகர் கீவ்வில் ஒன்று கூடினர்.
இந்த விஜயத்தின் போது உக்ரேனை ஆதரிப்பது குறித்தும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் அவர்கள் விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரேன் அல்லது ஐரோப்பா சம்பந்தப்படாமல் அமெரிக்கா எந்த சமாதான உடன்படிக்கைக்கும் முத்திரை குத்த முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்த விஜயத்தின் போது வலியுறுத்தினர்.
உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரைவான ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
வொஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் உக்ரேனையும் ரஷ்யாவுடனான ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கி வைப்பதன் மூலமும், மொஸ்கோவின் 2022 படையெடுப்பிற்கு கீவ்வை குறை கூறுவதன் மூலமும் அவர்களை கவலையடையச் செய்கிறார்.
இது மொஸ்கோவிற்கு அரசியல் பரிசுகளையும் வலுவான பொருளாதார நன்மைகளையும் தரக்கூடும்.
ரஷ்யாவின் மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் ஒலெக் வ்யூகின் கருத்துப்படி, மொஸ்கோ இரண்டு விரும்பத்தகாத விருப்பங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் வொஷிங்டனின் அழுத்தம் வருகிறது.
உக்ரேனில் நிலப்பரப்பைக் கைப்பற்ற அழுத்தம் கொடுக்கும்போது ரஷ்யா இராணுவச் செலவினங்களை உயர்த்துவதை நிறுத்தலாம் அல்லது அதைப் பராமரித்து பல ஆண்டுகளாக மெதுவான வளர்ச்சி, அதிக பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரங்களுக்கு விலை கொடுக்கலாம்.
இவை அனைத்தும் அரசியல் அபாயங்களைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.