சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் முறையிடுவதற்கு 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் வகையில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 045 347 1122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரீகர்கள் 052 205 5522 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சினைகளை முறையிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.