அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தான் இப்படி கூறியதை நம்ப முடியவில்லை என்று கூறினார்.
அதேநேரம் அவர், ஜெலென்ஸ்கியை “மிகவும் துணிச்சலானவர்” என்றும் அழைத்தார்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ட்ரம்ப் இந்த விடயங்களை பேசினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர், மொஸ்கோவுடன் முதல் உயர்மட்ட அமெரிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி ட்ரம்ப் நிர்வாகம் அதன் மேற்கத்திய பங்காளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பின்னர் இந்த வார சந்திப்புகள் வந்துள்ளன.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, போருக்கு ஜெலென்ஸ்கியைக் குற்றம் சாட்டியதுடன், முன்னதாக சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தவறியதற்காக அவரைத் திட்டினார்.
இந்த நிலையில் ட்ரம்புக்கும், உக்ரேன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஜெலென்ஸ்கி தனது நாட்டிற்கான சில வகையான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவார் என்று நம்புகிறார்.
அதேநேரம் வெள்ளியன்று வொஷிங்டனுக்கான தனது விஜயத்தில், உக்ரேனின் அரிய பூமி கனிம வளங்களை அமெரிக்கா அணுகும் ஒப்பந்தத்தில் ஜெலென்ஸ்கி கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.