நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், இமயமலைப் பகுதி முழுவதும் அதிர்வு உணரப்பட்டது.
பாட்னா, முசாபர்பூர் மற்றும் பீகாரின் அருகிலுள்ள பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
நேபாளத்தின் சிந்துபால்சோக் மாவட்டத்தின் பைரப் குண்டாவைச் சுற்றி அதிகாலை 2.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தை அளந்துள்ளது.
அதேநேரத்தில், இந்தியாவின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் 5.5 என அதன் அளவை மதிப்பிட்டுள்ளது.
6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது, குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக மையப்பகுதிக்கு அருகில், கட்டிடங்கள் குலுக்கல் மற்றும் விரிசல்கள் உருவாக்கம் உட்பட.
எனினும், வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர் சேதங்கள் தொரட்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த ஆண்டு ஜனவரியில், திபெத்தின் இமயமலைப் பகுதியில் 7.1 ரிக்டர் அளவுள்ள வலுவான ஆறு நிலநடுக்கங்களால் 125க்கும் அதிகமானோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.