டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகரும், உலகின் மிகப்பெரும் செல்வந்தருமான எலான் மஸ்க்கிற்கு 14ஆவதாகக் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது. அதன்பின் இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன.
பின்னர் தொடர்ந்து பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் பாடகி கிரீம்சை திருமணம் செய்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
3 மனைவிகளையும் பிரிந்த அவர், ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையே சமீபத்தில் பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் எலான் மஸ்க்கிற்கும், தனக்கும் ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும் எலான் மஸ்க்-ஷிவோன் ஷில்லீஸ் தம்பதிக்கு 14-வது குழந்தை எப்போது பிறந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.