யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரையும் மானிப்பாய் பொலிஸ் நிலையில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.