• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்பு!

மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்பு!

Rahul by Rahul
2025/03/02
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.

16 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பௌத்த மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி,தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு நாள் தலதா மாளிகையை வழிபட வேண்டும் என்பது இந்த நாட்டின் பௌத்த மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்தார்.

நாட்டில் இழந்து வரும் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்கவும் இந்த வாய்ப்பு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்க இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புத்தாண்டின் நீட்சியாக நடைபெறும் தலதா கண்காட்சி நாட்டை புதிய திசையில் இட்டுச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பத்து நாட்கள் நடைபெறும் தலதா கண்காட்சியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, எந்தவித தடைகளும் அல்லது இடையூறுகளும் இல்லாமல் தலதா ஆண்டகையை வழிபடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும், இதற்காக அரசாங்கம் உச்ச பங்களிப்பையும் தலையீட்டையும் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

முக்கியமாக மூன்று வரிசைகளின் ஊடாக வரும் பொதுமக்களுக்கு, தலதா மாளிகையை வழிபடும் வாய்ப்பை வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

தலதா மாளிகை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் வழங்கும் அறிவுறுத்தல்களின்படி செயல்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

தலதா கண்காட்சி நடைபெறும் காலகட்டத்தில் கண்டி பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவும், மாணவர்களின் கல்விக்காக வேறு நாட்களில் பாடசாலைகளை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​தலதா மாளிகையை வழிபட வரும் பக்தர்களின் சுகாதார வசதிகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதோடு அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மக்களின் சுகாதாரம், குடிநீர் தேவைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தலதா மாளிகையை வணங்க வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்காக தானசாலைகள் நடத்த விரும்புவோர் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்குவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

மக்களிடையே பௌத்த ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அலங்காரங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் விசேட தலதா நிகழ்வு குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

இதில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகள், முப்படைகள் மற்றும் பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்டஅதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: ColomboKandylkanewsPresidentsrilankaupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது!- மனோ கணேசன்

Next Post

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

Related Posts

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்
இலங்கை

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

2026-01-30
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை
இலங்கை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

2026-01-30
சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இலங்கை

சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

2026-01-30
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
இலங்கை

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

2026-01-30
யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!
இலங்கை

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

2026-01-30
சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –
யாழ்ப்பாணம்

சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –

2026-01-30
Next Post
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2025 ரமலான் : புனித மாதத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

2025 ரமலான் : புனித மாதத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

0
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

0
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

0
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

0
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.