அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 291.05 ரூபாவாகவும், 299.61 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 28) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 291.19 ரூபாவாகவும், 299.73 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
வளைகுடா நாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்த அதேவேளை, வெளிநாட்டு நாணயங்களின் கூடைக்கு எதிராக பெருமளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.