பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்பனாவின் வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளதால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை திறக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கல்பனா தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்துள்ளார் எனவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கல்பனாவின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.