5.2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதியானது 52 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
34 வயதான சந்தேக நபர் இன்று (05) அதிகாலை 01.00 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தனது பயணப் பொதிகளுக்குள் இருந்த உணவுப் பொட்டலங்களில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.