யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் நேற்றுக் காலை வீதியில் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்களைப் பொலிஸார் சம்பவம் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
குறித்த வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோட்டார் சைக்கிள் இலக்க தகட்டின் அடிப்படையில், சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரிடம் இருந்து பெண்ணிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதேவேளை அவருடன் சென்ற மற்றைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் ந டவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.