சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, வடக்கின் பெண் உற்பத்தியாளர் விழாவும் கலைவிழாவும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பெண் தொழில் முனைவோரின் உள்ளூர் தயாரிப்புக்கள், ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள், ஆடை , ஆபரணங்கள், கைவேலை அலங்கார பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் வடக்கு, கிழக்கு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், புத்தாக்க நிகழ்வுகள் என்பனவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.