2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியானது டெல்லி டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்ளவுள்ளது.
2025 ஐ.பி.எல். தொடரின் நான்காவது ஆட்டமானது இப் போட்டி இன்றிரவு 07.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் ஆரம்பமாகும்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரிஷப் பந்த், இந்தியன் பிரீமியர் லீக்கின் 3 ஆவது நாளில் தனது புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வழிநடத்தும்போது, தனது முன்னாள் உரிமையாளரை எதிர்கொள்வதால் அனைவரின் பார்வையும் அவர் மீது இருக்கும்.
கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டெல்லியால் விடுவிக்கப்பட்ட பந்தை லக்னோ அணியானது 27 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கியது.
லீக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.
சனிக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் போட்டியில் பில் சால்ட் செய்ததை போன்றே, ஏலத்தில் அவர்கள் என்ன இழந்தார்கள் என்பதை டெல்லிக்கு காட்ட பந்த் இந்த ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்வார்.
இருப்பினும், அவருக்கு முன்னால் அக்சர் படேல் நிற்பார், அவர் பந்த் விட்டுச் சென்ற தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தனது முன்னாள் அணியை எதிர்கொள்ளும் மற்றொரு வீரர் கே.எல். ராகுல் ஆவார்.
கடந்த ஆண்டு ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பின்னர் லக்னோ அணியை கைவிட்டு டெல்லி அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இரு அணிகளும் உலகத் தரம் வாய்ந்த திறமைகளைக் கொண்டவையாகவும், முன்னாள் வீரர்களுக்கும் அவர்களது அணிகளுக்கும் இடையிலான வரலாற்றைக் கொண்டதாகவும் இருப்பதால், இன்றைய போட்டி ஒரு உற்சாகமான மோதலாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.