கட்டுநாயக்க விமான நிலையத்தில், மிட்டாய் பொட்டலங்களில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.984 கிலோ குஷ் கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்றைய தினம் விமான நிலைய வருகைப் பிரிவில் நடத்தப்பட்ட சோதனையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து வருகை தந்த ஒரு ஆணும் பெண்ணும் இந்த போதைப்பொருளை கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 34 வயதுடைய ஆண் மற்றும் 25 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.