தமிழக பா.ஜ.க கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அண்ணாமலைக்கு பதில், புதிய மாநிலத் தலைவரை நியமிக்கவும் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.
அந்தவகையில் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் முழுவதும் பாஜகவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.