இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா தற்போது கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு (04) வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.