கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு ஒரு கைத்துப்பாக்கி, ஒரு மகசின் மற்றும் 12 தோட்டாக்களும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 41 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் கடந்த 2018 டிசம்பரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கல்கிசை பொலிஸாரால் முன்னர் கைது செய்யப்பட்டவர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.