2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (29) நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐ.பி.எல். சீசனின் 48 ஆவது போட்டியானது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பாகும்.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி, 9 ஆட்டங்களில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.
அதேநேரம், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி, புள்ளி பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.
அவர்கள் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி மூன்றில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களில் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இரு அணிகளும் இதுவரை 34 ஐ.பி.எல். போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் கொல்கத்தா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
கடந்த சீசனில், டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் 2 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதின.
இரண்டிலும் கெல்கத்தா அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.