இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களாக அமைக்கப்பட்ட 321 வாக்களிப்பு நிலையங்களிலும் இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் சுமூகமான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகிறது.
தமிழர் பகுதிகளில் மிகவும் மந்த கதியிலான வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வந்த போதிலும் காலை 9.00 மணிக்குப் பின்னராக பொதுமக்கள் மும்முறமாக ஈடுபட்டதனை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
குறிப்பாக வயோதிபர்கள் ஆர்வமாக தமது வாக்குப் பதிவுகளை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை, திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 319,399 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.