கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த பாப்பரசர் 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தனது வாழ்த்துச் செய்தியில், போப்பாண்டவரின் மகத்தான பொறுப்பை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தை வழிநடத்தும் போப் லியோ XIV பலத்தையும் ஞானத்தையும் பெற வாழ்த்தினார்.
“உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு உங்கள் தலைமை நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொண்டு வரட்டும்” என்று ஜனாதிபதி அனுரகுமார, இலங்கை மக்கள் சார்பாக அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.