கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று (25) ஆரம்பமான பங்களாதேஷுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்.
இதனால், முதல் நாள் ஆட்ட முடிவில் சுற்றுலா பங்களாதேஷ் அணியானது 08 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களை எடுத்து தடுமாறியது.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மூவரான அசிதா பெர்னாண்டோ (2/43), விஷ்வா பெர்னாண்டோ (2/35), மற்றும் சோனல் தினுஷா (2/22) ஆகியோர் இணைந்து திறம்பட பந்து வீசினர்.
இதனால் வங்கதேச தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் துடுப்பாட்டம் செய்ய தீர்மானித்தது அவரது அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபடியாக ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களையும், முஷ்ஃபிகுர் ரஹீம் 35 ஓட்டங்களையும் மற்றும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் தைஜுல் இஸ்லாம் 09 ஓட்டங்களுடனும், எபாடோட் ஹொசைன் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகும்.
















