அமெரிக்க ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிவிதிப்பானது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி எதிர் வரும் ஜூலை 9ஆந் திகதியுடன் பரஸ்பர வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது.
இந் நிலையில், பரஸ்பர வரி விதிப்பை மேலும் சில காலத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதா? என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், கால அவகாசத்தை நீடிக்கும் திட்டம் இல்லை. அதற்கு பதிலாக, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கிறோம். என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 20 சதவீதமோ, 40 சதவீதமோ அல்லது 50 சதவீதமோ வரி செலுத்த வேண்டியிருக்கும் என சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம் என்று தெரிவித்தார்.














