தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் ஐந்தாவது நாளான நேற்று (04) நாட்டின் 13,642 இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது, நுளம்புகள் பெருகக்கூடிய 3,886 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், 382 இடங்கள் நுளம்பு குடம்பிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஐந்தாவது நாளில், 396 சிவப்பு அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 100 பேர் மீது சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூன் 30 ஆம் திகதி முதல் இதுவரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையின் போது, 1,11031 இடங்கள் சோதனை செய்யப்பட்டு, இதுவரை, நுளம்பு குடம்பிகள் உள்ள 3,357 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 2,999 சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், 673 சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.