பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த அறிக்கையில் “தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்து, அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















