யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.30 மணி அளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் காணப்படுகின்ற நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















